ETV Bharat / state

நாளை திரையரங்குகள் திறப்பு: கூடுதல் காவலர்கள் தீவிர கண்காணிப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

தூத்துக்குடி: திரையரங்குகள் திறக்கப்படுவதையொட்டி கரோனா விதிமுறைகளை கண்காணிக்க கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

cctv camera
cctv camera
author img

By

Published : Nov 9, 2020, 2:57 PM IST

தீபாவளி பண்டிகை தொடங்க இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில், துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதிய விதமான ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மக்கள் அச்சமின்றி கடைகளுக்கு வந்து செல்லவும், திருட்டுச் சம்பவத்தை குறைக்கவும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று(நவ. 09) தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதை தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம்.

இந்த நேரங்களில் பொதுமக்களுடைய கவனத்தை திசை திருப்பி திருடர்கள் கைவரிசையைக் காட்டும் சூழ்நிலை ஏற்படலாம். இதனைத் தடுக்கும் வகையில் 2 வாகனங்களில் தலா 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள ரோந்து வாகனங்கள் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.

360 டிகிரியில் சுழலும் வகையில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனமும் பணியில் ஈடுபடுகிறது. கண்காணிப்புக் கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்யவும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் சிறிய கிராம பகுதிகள் முதல் நகரப்பகுதி உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் மொத்தம் 8000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

கண்காணிப்பு பணியில் காவலர்கள்

நாளை (நவ. 09) திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதால் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்புப் பணயில் ஈடுபடுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகளுக்கு ஏங்கித் தவிக்கும் அரசு உண்டு உறைவிடப் பள்ளி - எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.