ETV Bharat / state

போதைப் பொருட்கள் கடத்தலா? தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை! - சோதனை

Drugs Smuggled by Train: ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Drugs Smuggled by Train
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 3:23 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி விற்பனை செய்தாலோ, உபயோகம் செய்தாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய புகார் கிடைத்துள்ளது. இவ்வாறு போலீசாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு எஸ்பி ஜான்சன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி போதைப்பொருள் டிஎஸ்பி சந்திரகுமார் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில், தூத்துக்குடி போதைப்பொருள் சம்மந்தமாக சிறப்பு பயிற்சி பெற்ற நாய் படைப்பிரிவுவைச் சேர்ந்த அர்ஜுன் என்ற நாய், அதன் பயிற்சியாளர் ஆனந்த சிவகுமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி ரயில் நிலையங்களில் போதைப் பொருளைத் தடுப்பதற்காக பல்வேறு சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: சொத்து தகராறு காரணமா கணவன், மைத்துனர் சுட்டுக் கொலை; போலீசில் சரணடைந்த பெண்..!

இதைத் தொடர்ந்து இன்று (ஜன.2) மைசூரில் இருந்து தூத்துக்குடி வந்த வண்டி எண் 16236 மைசூர் - தூத்துக்குடி ரயிலில் வந்த பயணிகளின் உடமைகளையும், ரயில் பெட்டிகளிலும் கஞ்சா மற்றும் அபின் போன்றா போதைப் பொருள்கள் உள்ளனவா அல்லது கடத்தி வரப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் ஈடுபட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர், இச்சோதனை ரயில் நிலையத்தில் மற்றும் ரயில் பெட்டிகளில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியா - வங்கதேச எல்லையில் அதிகரிக்கும் போலி அடையாள அட்டை தயாரிப்பு..! என்ஐஏ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.