ETV Bharat / state

"பாஜகவின் பிராண்ட் அம்பாசிடரே ராகுல் தான்" - அண்ணாமலை! - ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை

ராகுல் காந்தி கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் பாஜகவின் பிராண்ட் அம்பாசிடரே ராகுல் தான் என்றும் அவர் பேசிக் கொண்டே இருந்தால் தான் பாஜக வளரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Annamalai interviewed
அண்ணாமலை
author img

By

Published : Mar 25, 2023, 8:03 AM IST

"ராகுல் காந்தி கட்டாயம் தேர்தலில் போட்டியிடனும், பாஜகவின் பிராண்ட் அம்பாசிடரே அவர் தான்": அண்ணாமலை

தூத்துக்குடி: பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தூத்துக்குடிக்கு வருகை புரிந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், "மோடி என்ற பெயர் கொண்ட அனைவருமே கொள்ளையர்கள் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி எம்.பி. பதவியில் இருக்கும் தகுதியை ராகுல் காந்தி இழந்து உள்ளார். இதை நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்தியாவின் உச்சபட்ச காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அரசை எதிர்த்து கார்ட்டூன் மீம் போடுபவர் அனைவருமே நள்ளிரவு இரண்டு மணிக்கு கைது செய்யும் போது சட்டம் பொருந்தும் என்றால் ராகுல் காந்திக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

ராகுல் காந்தி பொதுவாக இந்த விவகாரத்தை அவர்களாகவே ஏற்படுத்தி கொண்டு உள்ளனர். சௌகித்தார் என்ற விவகாரம் தொடர்பாக பேசும் போது நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏற்கனவே எச்சரிக்கை கொடுத்தது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆகையால் சாதாரண மனிதனுக்கும், ராகுல் காந்திக்கும் சட்டம் பொருந்தும் என்பதே சரி என்றார்.

தற்போது நாடாளுமன்ற சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவித்த அவர், சபாநயகர் இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் இதற்கு முன் எடுத்த நடவடிக்கை குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரத்தில் தண்டனையில் இருந்து வெளிவர ராகுல் காந்திக்கு பல வழிகள் உள்ளது. ஆகையால் சபாநாயகர் எடுத்த நடவடிக்கையில் எந்தவித தவறும் இல்லை. ராகுல் காந்தி கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும், ஏனெனில் பாஜகவின் மிகப் பெரிய பிராண்ட் அம்பாசிடரே ராகுல் காந்தி தான். ராகுல் காந்தி அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

மேலும், பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின்பு பல குழப்பத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி உள்ளார். ராகுல் காந்தி பேசிக் கொண்டே இருந்தால் தான் பாஜக வளர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே 2024-ல் புது ஸ்லோகனோடு ராகுல் காந்தி மீண்டும் வர வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாகும். ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டப்படியானது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் அரசுப் பள்ளிகள் அரசப் பள்ளியாக மாறும் - இறையன்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.