ETV Bharat / state

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 3 சிறார்களுக்கு அதிநவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை! - மாரடைப்பு

Angiogram treatment: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக மூன்று சிறார்களுக்கு அதிநவீன ஆஞ்சியோகிராம் மூலம் இருதய ஓட்டையை சரி செய்யும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன ஆஞ்சியோகிராம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:09 PM IST

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன ஆஞ்சியோகிராம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரிவில், இருதய ரத்தக்குழாய் நுண் சிகிச்சை ஆய்வு கூடம் (கேத் லேப்) கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மேலும், மாரடைப்பு நோயாளிகளுக்கான ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டண்ட் சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டு, சுமார் 4000-க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் ஒரு அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பிறக்கும் குழந்தைகளுக்கு நூற்றில் ஒருவருக்கு இருதய கோளாறு இருக்க வாய்ப்புண்டு. அவற்றில் பெரும்பாலும், இருதயத்தில் உள்ள இரண்டு அறைகளுக்கு நடுவே உள்ள சுவரில் ஏற்படும் ஓட்டையாகும். இதை ASD,VSD ,PDA என்று ஆங்கிலத்தில் அழைப்பர். இந்த வகை ஓட்டைகள் ஆரம்ப காலகட்டங்களில் ஓபன் ஹார்ட் சர்ஜரி, இருதய பைபாஸ் சிகிச்சை மூலமாகவே சரி செய்யப்பட்டது.

பின்னாளில், அறுவை சிகிச்சை இல்லாமல், ஆஞ்சியோகிராம் மூலம் ஓட்டைகளை அடைக்கும் அதிநவீன சிகிச்சை செயல்பாட்டிற்கு வந்தது. இவ்வகை சிகிச்சையில் உடம்பில் தழும்பு மற்றும் இரத்த இழப்பு ஏற்படுவதில்லை. இத்தகைய இருதயத்தில் உள்ள ஓட்டையை ஆஞ்சியோ மூலம் சரி செய்யும் அதிநவீன சிகிச்சை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது.

தற்போது, இந்த அதிநவீன ஆஞ்சியோகிராம் மூலம் இருதய ஓட்டையை சரி செய்யும் சிகிச்சை, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதல்முறையாக மூன்று சிறார்களுக்கு அக்.28 அன்று வெற்றிகரமாக ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டு, சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த மூன்று குழந்தைகளும் (4 வயது குழந்தை, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி) ஆரோக்கியமாக உள்ளனர்.

இவர்களுக்கு ASD எனப்படும் இருதய அறைகளுக்கு இடையில் காணும் ஓட்டை, ஓபன் சர்ஜரி (Open Surgery) இல்லாமல் சரி செய்யப்பட்டது. சிகிச்சை அனைத்தும் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மற்றும் மத்திய அரசின் ஆயுஸ்மான் திட்டத்தின் மூலம் இலவசமாக பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை தனியார் மருத்துவ மருத்துவமனையில் செய்வதற்கு சுமார் 2 லட்சம் வரை செலவாகும் நிலையில், இலவசமாகவே செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை, இருதய மருத்துவத்துறை அதிகாரி டாக்டர் பாலமுருகன், குழந்தைகள் இருதய மருத்துவ நிபுணர் டாக்டர். செந்தில்குமார், டாக்டர் கணேசன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் ஆலன்பெண்ணி செவிலியர்கள், மயக்கவியல் நிபுணர்கள், கேத் டெக்னீசியன்கள் ஆகியோர் கொண்ட குழுவினால் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தேவி கூறுகையில், “பள்ளியில் இருதய நோய் குறித்து ஆய்வு செய்ய வந்த போது தான், என் மகளுக்கு இந்த பிரச்னை இருப்பது தெரியும். தற்போது நல்ல முறையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது குழந்தை நன்றாக உள்ளது” என்றார்.

அதைத் தொடர்ந்து, இருதய மருத்துவ துறை மருத்துவர் பாலமுருகன் கூறுகையில், “மாரடைப்பு நோயினால் ஏற்படும் இருதய ரத்த நாள அடைப்புக்கு, சிறந்த முறையில் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு, அடைப்பு அதிகமான உள்ள நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் ஸ்டண்ட் சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் இங்கு கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 4 ஆயிரம் மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது.

2 ஆயிரம் நோயாளிகளுக்கு ஸ்டண்ட் சிகிச்சை அளித்து தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். இதைத்தவிர இருதய துடிப்பு ஏற்பட்டு, இருதய செயலிழப்பு ஏற்பட்ட 15 நோயாளிகளுக்கு நிரந்தர பேஸ் மேக்கர் கருவி தேவைப்பட்டது. அவர்களுக்கு பேஸ் மேக்கர் பொருத்திய நிலையில், அந்த 15 நோயாளிகளும் நலமாக உள்ளனர்.

புதியதாக கடந்த வாரம் சிறார்கள் மற்றும் குழந்தைகளுக்கு, சிறு வயதில் பிறவி கோளாறு, இருதய கோளாரால் ஏற்படும் ஓட்டை, அதிநவீன முறையில் ஓபன் ஆபரேஷன் இல்லாமல் ஆஞ்சியோ மூலம் சின்ன துளையிட்டு, அதன் மூலம் சென்று ஓட்டையை அடைத்து மூன்று பேரும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சை ஒரே நாளில் வெற்றிகரமாக முடிந்தது.

இந்த அதிநவீன சிகிச்சைக்கு முன்னாட்களில் ஓபன் சர்ஜரி தேவைப்பட்டது. பின்னர் இந்த அதிநவீன டிவைஸ் நடைமுறைக்கு வந்து பெருநகரங்களான சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் மட்டும் சிகிச்சையானது செய்யப்பட்டு வந்தது. தற்போது தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலமும், ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் மூலமாகவும், இலவசமாக செய்யப்பட்டு நல்ல முறையில் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

ஓபன் ஆப்பரேஷன் இல்லை என்ற காரணத்தினால், இந்த சிகிச்சை மூலம் இரத்த இழப்பு, தழும்பு ஏற்பட வாய்ப்பில்லை. பொதுமக்கள் இதயத்தில் ஏற்படும் ஓட்டை ஆகியவை, பீதி அடையாமல் அரசு மருத்துவமனை அணுகி சிறந்த முறையில் பயன்பெற்று கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சிவகுமார் கூறுகையில், “தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 வருடங்களுக்கு முன்பு இருதய ரத்தக்குழாய் நுண் சிகிச்சை ஆய்வு கூடம் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு தொடங்கப்பட்டது. அதன் மூலம் (கேத் லாக்) இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகளால் வரக்கூடிய நோயான, ஹார்ட் அட்டாக் நோய்க்கு வைத்தியம் பார்த்தோம்.

அதைத் தொடர்ந்து ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி பார்த்தோம். 3 வருடங்களில் 4 ஆயிரம் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அதுபோக, இருதய துடிப்பு சில நேரங்களில் குறைவாக இருப்பதாக வந்தவர்களுக்கு, பேஸ்மேக்கர் என்று சொல்லக்கூடிய சீராக இயங்கக்கூடிய கருவியை பொருத்தி தற்போது நன்றாக உள்ளனர்” எனக் கூறினார்.

மேலும், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த வகை சிகிச்சையால் பயனாளிகள் இனி சென்னை வரை செல்லும் அவசியம் இல்லை. இங்கேயே வந்து பரிசோதனை செய்து சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்கள் பங்கேற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.