தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.
அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 600 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 18 அம்மா மினி கிளினிக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அம்மா கிளினிக்கை விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அவர் கிஸான் மன் தன் யோஜனா திட்டத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ண மூர்த்தி என்பவருக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான டிராக்டரை, ரூ.3.59 லட்சம் மானியத்தில் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: அம்மா மினி கிளினிக்குகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கிராமத்திலேயே மருத்துவ சேவை - சி.வி.சண்முகம்