ETV Bharat / state

காவல் உடை அணிந்து லஞ்சம் கேட்ட தீபா பேரவை கட்சி பிரமுகர்! - political party member

தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து காவலர் போல் உடை அணிந்து லஞ்சம் வாங்கும் செயலில் ஈடுபட்ட அம்மா தீபா பேரவை கட்சி பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

தீபா பேரவை கட்சி தொண்டர்
author img

By

Published : Jul 2, 2019, 12:04 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கட்சி நிர்வாகி தொண்டர் சுப்பிரமணியன். இவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, சுப்பிரமணியன் என்பவர் போக்குவரத்து காவலரின் சீருடை போல் உடை அணிந்து, அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

அம்மா தீபா பேரவை கட்சி தொண்டர்

அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆட்டோவில் தண்ணீர் கேன்கள் எடுத்து வரப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு ஆய்வாளராக செயல்படும் அலுவலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் தண்ணீர் கேன் ஏற்றி வரும் வாகனங்களை நகரத்திற்கு உள்ளே அனுமதிக்கிறார். இதனை வெளிக்கொணருவதற்காகவே காவலர் சீருடையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தேன்" என்றார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

Intro:போக்குவரத்து போலீசார் போல் உடை அணிந்து லஞ்சம் வாங்கும் செயலில் ஈடுபட்ட பிரபல அரசியல்கட்சி நிர்வாகி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கட்சி நிர்வாகி தொண்டன் சுப்பிரமணியன் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக வந்தார். அப்பொழுது திடீரென அவர் போக்குவரத்து போலீசாரின் சீருடை போல உடை அணிந்து கொண்டு அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை நிர்வாகி தொண்டன் சுப்பிரமணியனின் இத்தகைய செயலை கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைதொடர்ந்து அவரைப்பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. ஆகவே தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக லோடு ஆட்டோவில் தண்ணீர் கேன்கள் எடுத்து வரப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு ஆய்வாளராக செயல்படும் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் தண்ணீர் கேன் ஏற்றி வரும் வாகனங்களை நகரத்திற்கு உள்ளே அனுமதிக்கிறார். மேலும் நகரத்திற்குள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வாகனம் செல்லவேண்டும் எனக்கூறுகிறார்.

சென்னை அண்ணாசாலையில் எந்நேரமும் தண்ணீர் லாரிகள் சென்று வருகின்றன. அதுபோல் இங்கும் தண்ணீர் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

போக்குவரத்து போலீஸ் அதிகாரி போல் வேடமணிந்து லஞ்சம் வாங்குவது போன்ற செயலில் ஈடுபட்ட தொண்டன்‌ சுப்பிரமணியனை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.