அப்போது அவர் பேசியதாவது, “புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தி இந்த கூட்டத்தை ஆரம்பிக்கிறேன். கடந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட போது பெரிதாக கூட்டணி இல்லை. ஆனாலும் இந்தியாவின் தென்பகுதியை பாஜக கவனிக்காமல் இருந்தது கிடையாது. சமீபத்தில் வந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். மீண்டும் மோடி அரசு கட்டாயம் அமையும். அப்படி அமையும் போது ஏற்கனவே தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டதை விட அதிகமாக பாடுபடுவோம் என உறுதி அளிக்கிறோம்.
இன்று திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி, ராசா, கார்த்தி சிதம்பரம் என அனைவரும் ஊழல்வாதிகள். அவர்கள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு கொள்ளை அடித்துள்ளனர். புல்வாமா தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் இறந்துள்ளனர். இதற்கு பதிலடியாக மத்திய அரசு, தீவிரவாதிகள் நம் வீரர்களை எப்படி நம்மை குண்டு வைத்து தாக்கினரோ அப்படியே அவர்களை தாக்கி அளித்துள்ளோம்.
மேலும், 5 லட்சம் வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்துள்ளோம். அதேபோல் மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு வளர்ச்சிக்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றிப்பெற்றால் தமிழகத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சி கொடுப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.