ETV Bharat / state

'அமித்ஷா வருகை தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது' -  கனிமொழி - kanimozhi mp

தூத்துக்குடி: மத்திய அமைச்சர் ஒருவர் மாநிலத்திற்கு வருவது பெரிய விஷயமல்ல என்றும் அமித்ஷா வருகையினால் தமிழ்நாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimozhi mp  Amit Shah's visit Tamil Nadu
'அமித்ஷா வருகை தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது '- கனிமொழி
author img

By

Published : Nov 20, 2020, 8:37 PM IST

தூத்துக்குடியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை இன்று (நவ. 20) வழங்கினார். அப்போது பேசிய அவர், கரோனா பொது முடக்கத்தின் காரணமாக மக்களவை உறுப்பினர் நிதி குறைக்கப்பட்ட போதிலும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி பெறப்பட்டது என்று கூறினார்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் அவலங்களையும், அவர்கள் மக்களுக்கு செய்துவரும் துரோகங்களையும் கூறி இந்த மாதம் முதல் பரப்புரை செய்ய உள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக திமுக தலைவர் வெளியிடுவார். அதில், தெரிவிக்கப்பட உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதை வலியுறுத்தியும் பரப்புரை செய்வோம்.

மத்திய அமைச்சர் மாநிலத்திற்கு வருவது பெரிய விஷயமல்ல. அந்தவகையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருவதால் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை" என்றார்.

இதையும் படிங்க: லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு கனிமொழி, கடம்பூர் ராஜு ஆறுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.