தூத்துக்குடி: சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இத்தம்பதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று (செப் 23) தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவீந்தர் சந்திரசேகர், “ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. எங்கள் திருமணம் இவ்வளவு பேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலக பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனம் பெறாத வருமானத்தை, எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல்.
செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் வதந்தி” என கூறினார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி ஆகியோர் திருமணம்!