ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், 'பாஜக தலைமையிலான மத்திய அரசு இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தனிப்பட்ட நபரின் விருப்பமான சட்டம் அல்ல. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் திடீரென்று கொண்டுவரப்பட்டது அல்ல. இது மக்களுக்குத் தேவையான ஒன்று.
இதை எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் மக்களையும், இளைஞர்களையும், பெண்களையும் திசை திருப்பி பொய் பரப்புரைகள் மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை எந்த குடிமகனுக்கும் இதில் பாதிப்பு கிடையாது. இந்தியாவில் பிறந்த இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. நீங்கள் அனைவரும் பிரதம அமைச்சரின் பிள்ளைகள்' என்று அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ திராணி உள்ளதா?. அவர்கள் அனைவரும், எதிர்வரும் தேர்தலுக்காக இஸ்லாமியர்களையும் பிற மதத்தினரையும் தூண்டி விடுவதாகக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!