ETV Bharat / state

எடப்பாடியின் மெகா கூட்டணி வியூகம்.. கடம்பூர் ராஜூ சொன்ன ரகசியம்! - கடம்பூர் ராஜு

அதிமுக தனித்து நிற்க தயார், அதே போல திமுக மற்றும் அனைத்து கட்சியும் தனித்து நிற்க தயாரா? என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 17, 2022, 6:19 PM IST

எடப்பாடியின் மெகா கூட்டணி வியூகம்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேவுள்ள கழுகுமலையில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு குடும்பம் கபாலிகரம் செய்கிறது என்ற காரணமாக தான், எம்ஜிஆர் கழகத்திலிருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தார். வைகோவும் வாரிசு அரசியலை
எதிர்த்து தான் திமுகவிலிருந்து பிரிந்தார்.

திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலங்காலமாக நிகழ்ந்து வருவது ஒன்றுதான், உதயநிதி ஸ்டாலினை எப்போது முன்னிலை படுத்தினர்களோ அப்போதே நாங்கள் நினைத்தோம், சட்டப்பேரவை உறுப்பினராகுவார், பின்னர் அமைச்சராகுவார் என்று. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மெகா கூட்டணி அமையும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வியூகம் அமைத்து வருகிறார்.

அதை தற்போது வெளியே சொல்ல முடியாது, தற்போதைய நிலையில் கூட்டணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் இந்த ஆட்சி களையப்பட வேண்டும். இந்த ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது.

தேர்தல் எப்போது வந்தாலும் மெகா கூட்டணி அமைந்தாலும், சரி கூட்டணி அமையாவிட்டாலும் சரி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக தனித்து நிற்க தயார், அதே போல திமுக மற்றும் அனைத்து கட்சியும் தனித்து நிற்க முடியுமா?” என்று கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க: ஏழைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் செய்வது தான் விடியல் அரசா? - இபிஎஸ் விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.