ETV Bharat / state

மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி அவசரக் கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மக்கள் பிரச்னைகளை பேச முயன்ற அதிமுக கவுன்சிலர்களை மேயரின் உத்தரவால் சட்டையைப் பிடித்து இழுத்து திமுக உறுப்பினர்கள், அதிமுக கவுன்சிலர்களை மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 28, 2023, 5:59 PM IST

மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள்!

தூத்துக்குடி: மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிவித்தலின் படி திமுக அரசின் மக்கள் விரோதச் செயலைக் கண்டித்து எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த மாநகராட்சி கூட்டத்தில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபான விநியோகம் சம்பந்தமான திருத்த விதிகளைக் கண்டித்தும், தொழிலாளர் வேலைச் சட்டம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கான மசோதாவை கண்டித்தும், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை சம்பவத்திற்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடே காரணம் என கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மட்டும் அகற்ற முயன்ற மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி பேச முயன்றார்.

அப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அவை மாண்பை சீர்குலைக்கும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி திடீரென மைக்கில் அவர்களை 'வெளியே தூக்கி போடுங்கள்' என உத்தரவிட்ட நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர்கள் குண்டர்களைப் போல செயல்பட்டு அதிமுக எதிர்க்கட்சி கொறடா மந்திர மூர்த்தி மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களை முதுகில் கையை வைத்து மாமன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளியே தள்ளினார்.

மக்கள் பிரச்னைகளை பேச விடாமல் அதிமுக மாமன்ற உறுப்பினர்களை பிடித்து வெளியே தள்ள உத்தரவிட்ட மாநகராட்சி மேயர் மற்றும் குண்டர்களை போல செயல்பட்ட திமுக மாமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: சிவப்பு சேலை, குங்குமம் சகிதமாக 100 நாள் திட்டப்பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்த கனிமொழி எம்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.