தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர் விஜயசீலன், தூத்துக்குடி புதுத்தெரு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்களுக்கு அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வீடு, வீடாக நடந்து சென்று வழங்கிய அவர், அதிமுக தலைமையிலான நல்லாட்சியில் நடைபெற்ற மக்கள் நல பணிகள் மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். “தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக தலைமையில் நல்லாட்சி அமைந்திட பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ‘திமுகவிற்கு வாக்களித்தால் அனைத்து தினமும் ஏப்ரல் ஒன்று தான்’- முன்னாள் ஐஆர்எஸ் சரவணன்