ETV Bharat / state

அதிமுகவின் மூத்த உறுப்பினரான சின்னப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு!

தூத்துக்குடி: விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கட்சியின் இலக்கிய அணி செயலரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. சின்னப்பன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சின்னப்பனுக்கு மீண்டு வாய்ப்பு
author img

By

Published : Mar 18, 2019, 10:27 PM IST

20 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரும் சமீபத்தில் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

இதில், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் கட்சியின் இலக்கிய அணி செயலரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. சின்னப்பன் (50) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் அதிமுகவில் ஆரம்ப காலத்திலிருந்து உறுப்பினராக இருந்து வருகிறார். அதிமுகவில் ஒன்றிய மாணவரணி, மாவட்ட மாணவரணி, எம்ஜிஆர் இளைஞரணி உள்ளிட்ட பொறுப்புகள் வகித்துள்ளார். தற்போது அதிமுகவின் மாநில இலக்கிய அணி செயலராக உள்ளார். இவர் 2001-2006 ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2006-2011 ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கட்சியின் இலக்கிய அணி செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி. சின்னப்பன் (வயது 50) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

20 மக்களவைத்  தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர். இதில், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கட்சியின் இலக்கிய அணி செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி. சின்னப்பன் (50) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் அ.தி.மு.க.வில் ஆரம்ப காலத்திலிருந்து உறுப்பினராக இருந்து வருகிறார். அதிமுகவில் ஒன்றிய மாணவரணி, மாவட்ட மாணவரணி, எம்.ஜி.ஆர். இளைஞரணி உள்ளிட்ட பொறுப்புகள் வகித்துள்ளார். தற்போது அதிமுகவின் மாநில இலக்கிய அணி செயலராக உள்ளார். இவர் 2001-2006 ஆண்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2006-2011 ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் கல்வி பயின்றுள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் கோகிலா. அரசுப்பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு பிரதீப் குமார், அனு வைசிகா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சின்னப்பனின் தந்தை போத்தி ரெட்டியார். சின்னப்பனின் தாய் வையம்மாள். இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.