ETV Bharat / state

ஓட்டப்பிடாரத்தில் களைகட்டிய அதிமுகவின் தேர்தல் பரப்புரை! - அதிமுக தேர்தல் பரப்புரை

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, அமைச்சர்கள் கடம்பூர் ராஜ், காமராஜ் ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

ஒட்டப்பிடாரத்தில் களைகட்டிய அதிமுக தேர்தல் பரப்புரை!
author img

By

Published : May 10, 2019, 8:04 AM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தனி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை ஆதரித்து, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் சங்கரபேரி, பண்டாரம்பட்டி, தேவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிமுக வேட்பாளர் மோகன் பேசுகையில், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் சீரான குடிநீர், தரமான சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

ஓட்டப்பிடாரத்தில் களைகட்டிய அதிமுக தேர்தல் பரப்புரை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தனி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி சங்கரபேரி, பண்டாரம்பட்டி, தேவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, உணவு அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சங்கரப்பேரி அதிமுக வேட்பாளர் மோகனுக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர்களையும் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பண்டாரம்பட்டியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து அமைச்சர்கள் டீ குடித்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து வேட்பாளர் மோகன் பேசுகையில், தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்த அவர் சீரான குடிநீர், தரமான சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் அமைத்து தருவதாக கூறி தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Visual FTP.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.