ETV Bharat / state

ஷூட்டிங் சென்ற கிராமத்தில் குடிநீர் வசதி செய்து கொடுத்த விஷால்.. குவியும் பாரட்டுகள் - சினிமா செய்திகள்

Vishal: மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

actor-vishal-provided-drinking-water-facility-in-the-village-thoothukudi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 11:27 AM IST

ஷூட்டிங் சென்ற கிராமத்தில் குடிநீர் வசதி செய்து கொடுத்த நடிகர் விஷால்...குவியும் பாரட்டுகள்

தூத்துக்குடி: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் "விஷால் - 34" திரைப்பட படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதிகளான குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசியாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காகச் சென்ற நடிகர் விஷால், அக்கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம மக்கள் கூறியதையடுத்து, தற்போது லட்சக்கணக்கில் செலவு செய்து போர்வெல் இயந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் சுமார் 60 அடி ஆழம் போர் போட்டுக் கொடுத்துள்ளார்.

மேலும் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தேக்கத் தொட்டிகள் அமைத்து, பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக 6 குழாய்களையும் பொருத்தி கொடுத்துள்ளார். இப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில், கிராம மக்களிடம் பணிகள் நிறைவடைந்த பின், அதன் திறப்பு விழாவிற்கு தான் கட்டாயம் வருவதாகவும் விஷால் கூறிச் சென்றுள்ளார்.

இவ்வாறு நடிகர் விஷால் படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து, தனது சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் கிராம மக்களிடையே மட்டுமின்றி, இச்செய்தியை அறிந்த அனைவரிடமும் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து குமாரசக்கணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி சென்னம்மாளிடம் கேட்டபோது, நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக வந்தபோது தன்னை வந்து கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாகவும், உங்களுக்கு என்ன வேண்டும் என்று விஷால் கேட்டதற்கு, தனக்கு ஒன்றும் வேண்டாம், கிராமத்தில்தான் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது, எனவே அதற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அது மட்டுமன்றி, நடிகர் விஷாலைப் பார்த்தே, "நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க? கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று இவர் கேட்டதற்கு "கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் ஷூட்டிங்-க்கு வந்துருவேன், மனைவி வீட்ல தனியா இருக்கணுமே" என்றும், தன்னை சென்னைக்கு வந்து விடுமாறும் கூறியதாக மூதாட்டி சென்னம்மாள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் ஜொலித்த தமிழக வீராங்கனை..! பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்தது எப்படி?.. கூறுகிறார் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.