ETV Bharat / state

அடுக்கு மொழியில் அசத்திய நடிகை விந்தியா! - அடுக்கு மொழி வசனங்கள்

தூத்துக்குடி: அதிகமாகப் பொய் சொல்வது சன்டிவி, அதற்கு ஒரு படி மேலே போய் பேசுவது டிடிவி என்று ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது நடிகை விந்தியா அடுக்குமொழியில் பேசி அசத்தினார்.

அடுக்கு மொழி வசனங்களை பரப்புரையில் தெறிக்கவிட்ட நடிகை விந்தியா
author img

By

Published : May 14, 2019, 8:06 AM IST

தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து திரைப்பட நடிகை விந்தியா தாளமுத்துநகர், மாப்பிள்ளையூரணி, ஹவுசிங் போர்டு காலனி (வீட்டுவசதி வாரியம்) உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

இதில் பேசிய அவர், "தன் குடும்ப சொத்து மொத்தத்தையும் விற்று ஆங்கிலேயர்களை இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று கப்பல் விட்டு போராடியவர் வ.உ. சிதம்பரனார். அவர் வாழ்ந்த இந்த பூமியில், மக்களுடைய சொத்தை சுருட்டி கப்பல் விடும் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் உள்ள திமுக கூட்டணி வெற்றிபெறக் கூடாது.

ஊழல் குறித்து பேசுவதற்கு அதிமுகவுக்கு அருகதை இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். நாம் ஏன் பேச வேண்டும், ஊழலின் மொத்த உருவமே திமுகதான். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர்.

‌ இந்த உலகத்தில் அதிகமாக பொய் சொல்வது சன்டிவி. அதற்கு ஒரு படி மேலே போய் பேசுவது டிடிவி. இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் சிறந்த நகைச்சுவையாளன் டிடிவி தினகரன்தான்.

அடுக்கு மொழி வசனங்களை பரப்புரையில் தெறிக்கவிட்ட நடிகை விந்தியா
நன்றி என்றால் என்ன என்பது தெரியாத, உப்பு போட்ட வீட்டுக்கே துரோகம் நினைக்கிற டிடிவி ஒருநாளும் வெற்றிபெறக் கூடாது" என்றார்

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து திரைப்பட நடிகை விந்தியா ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாளமுத்துநகர், மாப்பிள்ளையூரணி, ஹவுஸிங் போர்டு காலனி உள்ளிட்ட இடங்களில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பேசிய அவர்

தன் குடும்ப சொத்து மொத்தத்தையும் விற்று பிரிட்டிஷ்காரர்களை இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று கப்பல் விட்டு போராடியவர் வ.உ. சிதம்பரனார். அப்படிப்பட்ட இந்த பூமியில், மக்களுடைய சொத்தை சுருட்டி கப்பல் விடும் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் உள்ள திமுக கூட்டணி ஜெயிக்க கூடாது.
இந்த மக்களாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாம் போடுகின்ற கடைசி சண்டை இந்த இடைத்தேர்தல்.
பதவிக்காகவும், ஊழலுக்கும் தன் சொந்த குடும்பத்திற்காகவும் திமுக, காங்கிரசுடன் கை கோர்த்து ஒரு தமிழ் இனத்தையே அழித்த நாள் மே.18.
இந்தத் தேர்தல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் - ஸ்டாலினுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் அல்ல. அராஜக திமுகவிற்கும் மக்களாட்சிக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்.

உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால் வாக்கு எந்திரத்தில் இரட்டை இலைக்கு தான் வாக்கு போட்டதாக லைட் எரிகிறது என ஸ்டாலின் குறை கூறுகிறார். நான் கேட்கிறேன் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால் எப்படி லைட் எரியும்‌. உங்கள் ஆட்சியில் தான் மின்சாரமே கிடையாதே.
தமிழகத்தின் இருண்ட ஆட்சி திமுக ஆட்சி.

தேர்தல் சமயத்தில் ஸ்டாலின் பொள்ளாச்சி பிரச்சனை குறித்து பேசி பெண்கள் மீது அக்கறை இருப்பதாக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
தேர்தல் வந்தால் மட்டும் திமுக மதவெறி இல்லாத கட்சியாக மாறி விடுகிறது. பெண்கள் மீது அக்கறை உள்ள கட்சியாக மாறி விடுகிறது. கிராமத்திற்கு சென்று சபை கூட்டம் நடத்துகிறார்கள். இந்த நாடகத்தை எல்லாம் மக்கள் நம்பமாட்டார்கள். இந்த நாடகம் எல்லாம் மே 23 ஆம் தேதியோடு முடிந்து விடும். அதன் பின் அவர் கோட்டைவாசலில் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டு உட்கார வேண்டியதுதான். சக்திமானை நம்பி மாடியில் இருந்து குதித்து சாவது என்பதும், ராகுல் காந்தி பிரதமராக இருந்து இந்தியாவை காப்பார் என்று நினைப்பதும் ஒன்றுதான்.

ஊழல் குறித்து பேசுவதற்கு அதிமுகவுக்கு அருகதை இல்லை என மு க ஸ்டாலின் கூறுகிறார். நாம் ஏன் பேச வேண்டும், ஊழலின் மொத்த உருவமே திமுக தான். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர்‌ இந்த உலகத்தில் அதிகமாக பொய் சொல்வது சன்டிவி. அதற்கு ஒரு படி மேலே போய் பேசுவது டிடிவி தினகரன்.
இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் சிறந்த காமெடியன் டிடிவி தினகரன் தான்.
நன்றி என்றால் என்ன என்பது தெரியாத, உப்பு போட்ட வீட்டுக்கே துரோகம் நினைக்கிற டிடிவி ஒருநாளும் ஜெயிக்ககூடாது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.