தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகரத் தலைவர் வழக்கறிஞர் பழனிகுமார் தலைமையில் புதுக்கிராமம், கூசாலிப்பட்டி, ஊரணி தெரு, மறவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், கூலித்தொழிலாளர்கள், முதியோர் உள்ளிட்ட 200 நபர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் மளிகை பொருள்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தளபதி விஜய் மக்கள் இயக்க துணைத் தலைவர் பாலமுருகன், பொருளாளர், பொன் செந்தில்குமார், இணை செயலாளர் ஆறுமுகம், ஜான் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க... வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் மன்றம்