தூத்துக்குடி: புதிய துறைமுக கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் ஆமை இறந்த நிலையில் மிதந்துள்ளது. இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அலுவலர்கள் இறந்த ஆமையை கைப்பற்றி, எந்த வகை இனத்தைச் சேர்ந்த ஆமை, ஆமையின் வயது என்ன?, உணவுக்காக யாரும் இதை கொன்றார்களா? அல்லது கப்பலில் அடிபட்டு ஆமை உடலில் காயங்கள் எது உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆலைக்கு வந்து சாக்லேட் சாப்பிட்ட கரடி - பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை!