ETV Bharat / state

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - medical college

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும்

author img

By

Published : May 24, 2022, 6:27 PM IST

தூத்துக்குடியில் தமிழ்நாடு உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினார்கள்.

அப்போது பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன், ’உப்பில் அயோடின் பற்றாக்குறை காரணமாக முன் கழுத்துக் கழலை, தைராய்டு, மனவளர்ச்சி குறைபாடு, உள்ளிட்டப் பல்வேறு வகையான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அயோடின் கலந்த உப்பை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அதுபோல் உற்பத்தியாளர்களும் அயோடின் கலந்த உப்பினை அதற்கான தரத்துடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை மூலம் உப்பு உற்பத்தியாளர்கள் மீது போடப்பட்ட சிறு வழக்குகள் ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மூலமாக எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும்

உப்பளத்தொழிலாளர்களுக்கு எடைக்குறைவான செருப்பு வழங்க நடவடிக்கை: இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'உப்பு உற்பத்தியாளர்கள் வேண்டிய அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. மேலும் மழைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் தொழிலாளர்கள் உப்பளங்களில் வேலை செய்யும் வகையில் மிகக் குறைந்த எடையுள்ள காலணிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், சித்தமருத்துவம் உள்ளிட்டப் பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்கள் விரைவாக முடிக்கப்படும். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அனுமதி பெற்றவுடன் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அறிவிப்புக்கிணங்க, தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று விரைவில் அமைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துதுறை ஆணையர் செந்தில்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட சுகாதாரத்துறை மூலமாக உப்பளத்தொழிலாளர்கள் மருத்துவ முகாமை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: எஸ்பி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ தம்பதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.