ETV Bharat / state

மூதாட்டியிடம் செயின் பறிப்பு: சிசிடிவி மூலம் சிக்கிய திருடன்!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகையும் மீட்டனர்.

மூதாட்டியிடன் செயின் பறிப்பு
மூதாட்டியிடன் செயின் பறிப்பு
author img

By

Published : Feb 5, 2021, 3:45 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீநிவாசநகர் பழைய ஆர்.டி.ஓ ஆபிஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (65). இவர், ஜன.30ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது அங்குவந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சின்னம்மாளின் கழுத்திலிருந்த 5 சவரன் நகையை பறித்து விட்டுச் சென்றார்.

இது குறித்து சின்னம்மாள், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில் அதேபகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் நாதன் (39) என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சஞ்சீவ் நாதனை, கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 சவரன் நகையை மீட்டனர்.

இதையும் படிங்க: நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.