ETV Bharat / state

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து உயிரிழப்பு - tuticorin fisherman news

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற போது, மீனவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fisherman
மீனவர்
author img

By

Published : Aug 3, 2021, 10:58 PM IST

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் முத்தரையர் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சந்தன செல்வி என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில், செல்வம் கடந்த ஜூலை 31ஆம் தேதி 4:30 மணியளவில் ஜேசுராஜா, களஞ்சியம் உள்பட 10 மீனவர்களுடன் சேர்ந்து, ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ்கடலுக்கு கணவாய் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

ஆழ்கடலில் காசுவாரி தீவுக்கு கிழக்கே, 8 மீனவர்கள் கடலுக்குள் இறங்கி கணவாய் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, செல்வம் மட்டும் ஆழ் கடலுக்குள் தவறி விழுந்து மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் அவரை தேடி பார்த்துள்ளனர்.

ஆனால் பல மணி நேர தேடலுக்குப் பிறகும், கடலில் மாயமான செல்வத்தை கண்டுபிடிக்க முடியாததால், உடனடியாக கடலோர காவல் படைக்கும், மீன்வளத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

fisherman
மீனவர் தவறி விழுந்து உயிரிழப்பு

மீனவர்கள் நேற்று வேலை செல்லாமல், கடலில் மாயமான செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது.

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.3) அதிகாலை, மீனவர் செல்வத்தின் உடல் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக விரைந்த திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், செல்வத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அவரது சடலம் உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மீனவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆழ்கடலில் மீனவருக்கு ஒரு பிரச்சனை என்றால், அவசர உதவிக்கென தூத்துக்குடியில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.

குறிப்பாக கடலில் மாயமான மீனவரை தேடும் பணியில் ஹெலிகாப்டர், அதிவிரைவு படகுகள் இருந்தால், மீனவர்களுக்கு தகுந்த உதவியாக இருக்கும். மீனவர் செல்வத்தின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு தகுந்த நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் கருணை அடிப்படையில் செல்வத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்க பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தலை முடியை கலாய்த்த இருவரை அடித்துக் கொன்ற கும்பல் - ஏனாமில் பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.