தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற தசரா விழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசரா திருவிழா செப்.26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில் திருவிழாவின் 4ஆம் நாளான இன்று(செப்-30) அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் குலசேகரன்பட்டினம் பகுதி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 5ஆம் தேதி கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலய திருவிழா - சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் விஸ்வகர்மேஸ்வரர்