தூத்துக்குடி: நறுமண பொருள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் திமிங்கலத்தின் எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை தூத்துக்குடி பகுதியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய தீவிர சோதனையில், தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் என்பவரும் அவரது கூட்டாளிகளான கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனில், ஆனந்தராஜ், பெத்தேன், ஆகிய நான்கு பெரும் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரீசை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதன் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் 4 பேரையும் கைது செய்து ஆம்பர் கிரீசையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரீசின் மதிப்பு சுமார் ரூபாய் 30 கோடி இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை பதுக்கி விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவர் மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலரும் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்: மாணவிகளை முதல்வர் இருக்கையில் அமர வைத்த பள்ளி நிர்வாகம்!
இதையும் படிங்க: IT Raid:சாரதா மோட்டார்ஸ்க்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!
இதையும் படிங்க: 'கூலிப், ஹான்ஸ் இல்லையா..' பட்டா கத்தியைக் காட்டி அடாவடி செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு