ETV Bharat / state

தூத்துக்குடியில் 3 ரவுடிகள் கைது - thoothukudi

தூத்துக்குடியில் பிரபல ரவுடிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடி
ரவுடி
author img

By

Published : Jul 20, 2021, 4:23 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நேற்று (19.07.2021) தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, தூத்துக்குடி பீச் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜீடுஸ்குமார் (29), தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த மரிய அந்தோணி சகிலன் (24) மற்றும் தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து (28) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையின்போது, தூத்துக்குடி சின்னக்கடை தெரு பகுதி மற்றும் தூத்துக்குடி சந்தியப்பர் கோயில் தெருவைச் சேர்ந்த இருவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே தனிப்படை காவல் துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து அரிவாளைபறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜீடுஸ்குமார் மேல் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு வழக்குகளும், மரிய அந்தோணி சகிலன் மேல் 10 வழக்குகளும், பேச்சிமுத்து மேல் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.