தூத்துக்குடி: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில்-திருநெல்வேலி வழியாக சென்னைக்கு 40 மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று நேற்று (ஜூன்14) நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. கயத்தாறு அடுத்த அரசங்குளம் அருகே சென்ற போது, தேசிய நெடுஞ்சாலையிலிருந்த சிறிய பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக 8 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நாகர்கோவிலைச் சேர்ந்த சிவராமன்(33), கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறை சேர்ந்த ஜீசஸ் ராஜன்(47) ராஜபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாண்டி(32) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தேனி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் மீட்பு