ETV Bharat / state

தூத்துக்குடியில் 2 பச்சிளம் குழந்தைகளுக்கு கரோனா: தொடரும் தீவிர சிகிச்சை - தூத்துக்குடியில் 2 பச்சிளம் குழந்தைகளுக்கு கரோனா

தூத்துக்குடி: பிறந்த இரண்டு பச்சிளங் குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

 2 பச்சிளம் குழந்தைகளுக்கு கரோனா
2 பச்சிளம் குழந்தைகளுக்கு கரோனா
author img

By

Published : Jun 5, 2021, 9:24 PM IST

தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த ஏழு நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்கு முன்னதாக கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால் சிசுவுக்கும் தொற்று பாதிப்பு இருக்கலாம் எனக் கருதிய நிலையில் கடந்த 29ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு குழந்தை பிறந்தது.

இதையடுத்து, மறுநாள் 30ஆம் தேதி சிசுவுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை எனப் பரிசோதனையில் தெரியவந்தது.

இருப்பினும் சந்தேகத்தின்பேரில் மீண்டும் 31ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிறந்த பச்சிளங்குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து உடனடியாக தாயும், சேயும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

குழந்தை எடைக் குறைவாக உள்ள காரணத்தால் இங்குபேட்டரில் வைத்து கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல, கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தினைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 27 நாள்களுக்கு முன்னர் பிறந்த குழந்தைக்கும் கரோனா உறதியாகியுள்ளது.

உறவினர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறதிசெய்யப்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் பிறந்து 27 நாள்களான அந்தக் குழந்தைக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.