ETV Bharat / state

தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இருவர் பலி - இருவர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலையில் கட்டட வேலைக்குச் சென்ற இரண்டு தொழிலாளர்கள் அங்கிருந்த குளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்து உயிரிழந்தனர்.

workers died in spic factory
author img

By

Published : Aug 9, 2019, 7:36 PM IST

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ஸ்பிக் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்தத் தொழிற்சாலைக்கு கட்டட வேலைக்காக அதேப் பகுதியின் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அந்தோனி (54), பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த பிச்சையாண்டி (24) ஆகியோர் சென்றுள்ளார்.

கட்டட வேலைக்குத் தேவையான தண்ணீர் எடுப்பதற்காக அந்தப் பகுதியிலிருந்த குளத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பிச்சையாண்டி தவறி குளத்தில் விழுந்துள்ளார். உடனே அவரைக் காப்பற்ற அந்தோனியும் குளத்தில் குதித்துள்ளார். அந்தக் குளத்தில் தண்ணீர் அதிகமிருந்ததால் இருவரும் மூழ்கி உயிரிழந்தனர்.

இறந்த தொழிலாளர்கள்

இந்தச் சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையில் உள்ள குளத்தில் மூழ்கி கட்டிட தொழிலாளர்கள் இருவர் பலி.
Body:

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்பிக் உரம் தயாரிக்கும் நிறுவன தொழிற்சாலைக்கு கட்டிட வேலைக்கு சென்ற தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த அந்தோனி(54)மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்த பிச்சையாண்டி(24)ஆகியோர் சென்றுள்ளார்.

கட்டிட வேலைக்கு தேவையான தண்ணீர் எடுப்பதற்காக அந்த பகுதியில் இருந்த குளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பிச்சையாண்டி தவறி குளத்தில் விழுந்துள்ளார். உடனே அவரை காப்பற்ற அந்தோனியும் குளத்தில் குதித்துள்ளார். அந்த குளத்தில் தண்ணீர் அதிகம் இருந்ததால் இருவரும் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் பகுதி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்புதுறையினர் உதவியுடன் இருவர் உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக அங்கு இருந்த ஊழியர்களிடம் முத்தையாபுரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.