ETV Bharat / state

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு தினம்: பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 1,000 போலீசார்! - தூத்துக்குடி செய்திகள்

தூத்துக்குடி: நாளை ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு தினத்தை முன்னிட்டு, சுமார் தூத்துக்குடியில் ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி  ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு தினம்  தூத்துக்குடி கரோனா பாதிப்பு எண்ணிக்கை  sandeep nandhuri  Sterlite Gunfire Memorial Day
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு தினம்: தூத்துக்குடியில் 1,000 போலீசார் பாதுகாப்பு
author img

By

Published : May 21, 2020, 4:41 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நாளை ஸ்டெர்லைட் தூப்பாக்கிச் சூடு நினைவு தினத்தையொட்டி சுமார் 1,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். 144 தடை உத்தரவு இருப்பதால் 5 பேருக்கு மேல் பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மாவட்டத்தில் 113 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், இருவர் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள அனைவரும் மகாராஷ்டிரா, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து ஊர் திரும்பியவர்கள். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மட்டும் 1,000 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர்.

700 பேரைத் தனிமைப்படுத்த ஏதுவாக, 9 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 13 இடங்கள் நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களாக கண்காணிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், 1,919 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை அனுப்புவதற்கு இம்மாதம் மூன்று ரயில்கள் இயக்கப்படவுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: முட்டிபோட்டு நூதன போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.