தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாசில்தார் நகரைச் சேர்ந்த சின்னராசு என்பவரது மனைவி கடலி (48). இவர் நேற்று (ஆக.15) காலை அப்பகுதியிலுள்ள கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடலியின் கழுத்திலிருந்த 10 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடி உள்ளார். இதுதொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல் துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர். சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:டியூசன் வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோவில் கைது