ETV Bharat / state

ரூ.10 லட்சம் செல்போன்கள் மீட்பு- உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்பி!

தூத்துக்குடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ரூ.10 லட்சம் மதிப்புள்ள 102 செல்போன்களை மீட்டு மாவட்ட எஸ்.பி., உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

செல்போன்கள் மீட்பு
செல்போன்கள் மீட்பு
author img

By

Published : Oct 15, 2020, 5:33 PM IST

தூத்துக்குடி: செல்போன் திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சம்பவங்களில் தொலைந்துபோன செல்போன்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் வழக்குத்தொடர்பாக 102 செல்போன்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன.

செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்பி

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட செல்போன்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு செல்போன்களை தவறவிட்ட உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்தி ரூ.10 லட்சம் மதிப்புள்ள 102 செல்போன்களை சைபர் கிரைம் காவலர்கள் மீட்டுள்ளனர். மேலும் செல்போன் திருட்டு தொடர்பான வழக்குகளும் விசாரணையில் உள்ளன.

இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் - விஜய் சேதுபதிக்கு தாமரை கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.