திருவாரூர்: காட்டூர் அகரத்திருநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (27). காணூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.
இவர், கிடாரங்கொண்டான் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் குமரேசனை வழிமறித்து சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (Superintendent of police) விஜயகுமார் அங்கு விசாரணை மேற்கொண்டு, குமரேசன் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக குமரேசன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை (police investigation) நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோலுக்குப் பதிலாக டீசல்: பெட்ரோல் பங்கில் தீப்பற்றி எரிந்த கார்!