திருவாரூர்: முத்துப்பேட்டை கோவிலான் தோப்பை சேர்ந்தவர் அரவிந்த் (22). இவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் 06ஆம் தேதி 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து, அவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு இன்று (ஜூலை 20) வந்தது. அப்போது, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார்.
புலன் விசாரணை செய்து சிறப்பாக பணியாற்றிய முத்துப்பேட்டை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார். பாலியல் வன்புணர்வு செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது