திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (28) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
முன்னதாக ராஜதுரை, திவ்யாவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில், திடீரென ராஜதுரை தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், திவ்யாவை பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால், திவ்யா தனக்கு நியாயம் கேட்டு ராஜதுரை வீட்டிற்க்குச் சென்று முறையிட்டுள்ளார்.
அப்போது, அவரது பெற்றோர், சகோதரிகள் திவ்யாவைத் திட்டிய நிலையில், மனமுடைந்த திவ்யா வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து, ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் ராஜதுரை, அவரது பெற்றோர் வேதலட்சுமி, சகோதரி இந்திராணி, செல்வி, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராஜதுரையை மட்டும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.