திருவாரூர்: நன்னிலம் அருகே கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன்படி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று 'தனிக்கோயில்' கூத்தனூரில் தான் அமைந்துள்ளது.
ஒட்டக்கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்ட திருத்தலம் என்பதால், இது 'கூத்தனூர்' எனப் பெயர் பெற்றது.
இந்த ஆண்டு நவராத்திரி நிகழ்ச்சிகள் 12 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது. ஒன்பதாவது நாளான இன்று (அக்.14) சரஸ்வதி பூஜை பாத தரிசனம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற கலை நிகழ்சிகள், இந்த ஆண்டு நடைபெறவில்லை.
விஜயதசமி நாளன்று பக்தர்களுக்குத் தரிசனம் இல்லை
சரஸ்வதி கோயிலுக்கு வருபவர்கள் நோட்டுப்புத்தகம், பேனா, சிலேடு (எழுத்துப்பலகை) போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்துப் பூஜை செய்து எடுத்துச் சென்று வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் குழந்தைகளை அவர்களது பெற்றோர் விஜயதசமி நாளன்று, இங்கு அழைத்து வந்து சரஸ்வதி அம்மனை தரிசிக்கச் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக விஜயதசமி நாளான நாளை, பக்தர்கள் தரிசனம் இல்லை என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’நாட்டில் நல்லிணக்கம், வளம், நல்ல உடல் நலம் பெருகட்டும்’ -ஆளுநர் ஆயுத பூஜை வாழ்த்து