திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் வடக்குத்தெருவில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்த கிரமத்தில் இரு தரப்பினரிடையே சாதி பாகுபாடு இருந்துவருகிறது. இதில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டும் மற்றொரு தரப்பு மக்கள், இரு தரப்பினரையும் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பொதுக் குளத்தை அனைத்து சாதியினரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அம்மக்கள், தங்களுக்குச் சம உரிமை கிடைக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் கூறி கறுப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'ஜோக்கர்' பட பாணியில் நாமக்கல்லில் பல லட்ச ரூபாய் முறைகேடு?