ETV Bharat / state

தீர்ப்பை வாசிக்கும்போது நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடிய கைதி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்! - Thiruthuraipoondi Police

Thiruthuraipoondi Police Station: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக இரண்டு காவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 7:21 PM IST

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் குருமாறன் (23). இவர் மீது கஞ்சா விற்பனை செய்தல் உள்ளிட்ட ஏழு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே காவல்துறையினருக்கு குருமாறன் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரை திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், குருமாறன் மீது வழக்குப் பதிவு செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்பொழுது நீதிபதி, குருமாறனுக்கான நீதிமன்றக் காவல் குறித்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது, நீதிமன்றத்தில் இருந்து குருமாறன் தப்பி ஓடி உள்ளார். உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினர், குருமாறனை பிடிக்க முயன்ற பொழுது, அவர்களை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து குருமாறன் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தப்பி ஓடிய கைதி குருமாறனை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குருமாரனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற காவலர்கள் ராஜேஷ் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாகக் கூறி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீலகிரியில் சிறுமி உட்பட 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.