ETV Bharat / state

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு - 12 பட்டியல் எழுத்தாளர்கள் சஸ்பெண்ட் - நெல் கொள்முதல் நிலையங்கள்

திருவாரூர்: மாவட்டம் முழுவதிலும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, 12 பட்டியல் எழுத்தாளர்களை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார். நெல் கொள்முதல் நிலையங்கள்

Twelve Paddy collection centre
Twelve Paddy collection centre, நெல் கொள்முதல் நிலையங்கள்
author img

By

Published : Feb 14, 2020, 10:24 PM IST

திருவாரூரில் சம்பா அறுவடை பணிகள் முடிந்து மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வாணிபக் கழகம் சார்பில் 463 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. இந்த கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும்போது முறைகேடுகளில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் தலைமை அலுவலக பொது மேலாளர் தலைமையிலான பணிக்குழு மூலமாக சிறப்பு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் நெல் மூட்டைகளின் எடைகளில் தர வேறுபாடு மற்றும் தையல் குறைபாடு போன்ற காரணங்களின் அடிப்படையில் நேரடி கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தாளர்கள் 12 பேர் மற்றும் உதவியாளர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல் கொள்முதல் நிலையங்கள்

ஏற்கெனவே முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, 6 பணியாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 12 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: டாப் 5இல் இடம்பிடித்த ஸ்மிருதி மந்தனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.