திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், குறுவை சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை அறிவிக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள், " திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5,000 அறிவிக்கப்பட்டது.
இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் உரம், மின்சார தட்டுப்பாட போன்ற பல்வேறு இடர்பாடுகளையும் மீறி ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்து வருகின்றோம். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருத்தும் குறுவை சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்கவில்லை என்பது விவசாயிகளுக்கு வருத்தமளிக்கிறது.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு உரிய பரிசீலனை செய்து குறுவை சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பை விரைந்து அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரத்தில் 2ஆம் போக சாகுபடி!