திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3ஆம் தேதியான நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் மதியம் ஒரு மணிவரை மட்டும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
குறிப்பாக நகர்ப்புறங்களில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்வதற்காக மூன்று விதமான வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் பொதுமக்கள் கடை வீதிக்கு வந்து செல்லும் வகையில் பகுதி பகுதியாக பிரித்து அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நாளை பொதுமக்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படும் அட்டைகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், நாளை 3ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் மருந்தகங்கள், அம்மா உணவகங்கள், மட்டுமே திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு கரோனா தொற்று