திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சார்பில் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவன் முத்துமனோவின் இறப்பிற்கு நீதிகேட்டு வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் அருகில் வளரும் தமிழகக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிங்கை சரவணன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்த சிறை அலுவலர்கள் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.