திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அரசு மருத்துவர் ஒருவருக்கும், குடவாசல் காவல் உதவி ஆய்வாளருக்கும், மன்னார்குடி, கூத்தாநல்லூர், பொண்ணிறை, கொரடாச்சேரி, ஆண்டங்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 506 ஆக உயர்ந்துள்ளது. இதில் 180 பேர் சிகிச்சை பெற்று முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம், “விசாரணை தாமதம், குற்றவாளிகளுக்கு சாதகம்” - பழ. நெடுமாறன்