திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அஇஅதிமுக நிறுவனரும் தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழாவில் மேடையில் தொடர்ந்து பேசியதாவது, “2021 ஆம் ஆண்டில் வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும். அஇஅதிமுக ஆட்சி அதிகாரத்தை ஒரு நிமிடம்கூட தவறாகப் பயன்படுத்தியது கிடையாது.
எம்ஜிஆரின் தலைமையில் 1972ஆம் ஆண்டில் தொடங்கிய வெற்றி இன்றும் தொடர்கிறது; என்றும் தொடரும். மூன்றுமுறை தொடர்த்து வெற்றிபெற்றவர் எம்ஜிஆர். 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதா ஆட்சியில்தான்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே மீண்டும் 2021ஆம் ஆண்டிலும் ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலில் வெற்றிபெறும் கனவில் திமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் ஆனாலும் அதிமுகவே வெல்லும். காரணம் மக்கள் அதிமுகவை ஆதரிக்கின்றனர். இதுவே எங்களுக்கு வெற்றிதான்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : குடியரசு தின விழா - பி.எஸ்.என்.எல் சிறப்பு சலுகை