ETV Bharat / state

மேகதாது விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஷெகாவத் கருத்துக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம் - tn farmers leader pr pandian press meet Meke datu Dam issue

குடிநீருக்கு அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்த ஆதாரம் இருந்தால், மேக தாதுவிற்கு அனுமதி தர தயார் என மத்திய அமைச்சர் ஷெகாவத்தின் கருத்துக்கு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவிற்கு குறித்து மத்திய அமைச்சர் ஷெகாவத் கருத்துக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம்

author img

By

Published : Aug 12, 2021, 10:47 PM IST

திருவாரூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, "காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை என்கிற பெயரில் பிடி வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தள்ளுபடி அறிவித்த நாள்முதல் அதற்கான அரசாணை பிறப்பித்து விவசாயிகளை வழக்கிலிருந்து மீட்டெடுக்க முன்வர வலியுறுத்துகிறேன்.

மகசூல் இழப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா, பொட்டாசியம், டிஏபி போன்ற உரங்கள் மிகப்பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி தொடங்கவுள்ள நிலையில், நீர் தட்டுப்பாட்டால் உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்கு உரமிட முடியவில்லை. இதனால் மகசூல் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு உரிய காலத்தில் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு உரங்களை ஒதுக்கீடு செய்கிறதா? இல்லையா? பாரபட்சம் காட்டுகிறதா? என்பதை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

  • அவசர நடவடிக்கை எடுத்து மத்திய அரசிடமிருந்து தேவையான உரங்களை பெற்று மாவட்டங்களுக்கு முன்கூட்டியே அனுப்பி வைத்திட வேண்டும்.
    மேகதாதுவிற்கு குறித்து மத்திய அமைச்சர் ஷெகாவத் கருத்துக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம்

காவிரி பிரச்சினையில் தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எதிராகவும் கர்நாடக அரசுக்கு மேகதாது அணை கட்டவும் துணைபோகிறது என்பதையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக குடிநீருக்காக அணை கட்டிக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள ஆதாரம் இருந்தால், மேக தாது அணை கட்ட அனுமதி தருவதாக மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவிரி குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் மட்டுமே உள்ளதாக அரசியல் சட்டம் தெளிவுபடுத்துகிறது.

இதனை முழுமையாகத் தெரிந்திருக்கும் மத்திய அரசாங்கம், அவ்வப்போது சட்டத்திற்குப் புறம்பாக மேகதாது அணை கட்ட ஆதரவளிப்பதாக வெளியிடுகிற செய்தி குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் அவசரமாக முறையிட வேண்டும்.

மேகதாது அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முழுமையிலும் நடைபெறவுள்ள ஊராட்சி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'காங்கிரஸ் கட்சி ட்விட்டர் கணக்கு முடக்கம்- பாஜக காரணம் இல்லை என அண்ணாமலை விளக்கம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.