ETV Bharat / state

மண்பாண்டங்களை மறந்த மண்ணின் மைந்தர்கள்: மாறிவரும் பண்பாடு? - சென்ற ஆண்டு உற்பத்தியே தேங்கியுள்ளது

மக்கள் அனைவரும் மண்பாண்டங்களை மதிக்காமல் பித்தளை சில்வர் பாத்திரத்திற்க்கு மாறிவிட்டதால் பொங்கல் விழா வரும் நேரத்தில் வருமானமின்றி மண்பாண்ட தொழிலாளர்கள் தவிக்கின்றனர். அது மட்டுமின்றி தமிழர் பண்பாடும் திசைமாறிச் செல்கிறதோ என்ற கவலையும் ஏற்படுகிறது.

மண்பாண்ட தொழிலை மறந்து கூலி வேலைக்கு செல்லும் மண்பாண்ட தொழிலாளர்கள்

author img

By

Published : Jan 10, 2022, 6:30 PM IST

Updated : Jan 10, 2022, 8:44 PM IST

திருவாரூர்: அம்மையப்பன் கடாரம்கொண்டான் முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் மன்னார்குடி அருகே உள்ள கானூர் ராயபுரம் தென்கரை, வடகரை, நன்னிலம் நெடுங்குளம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பொங்கல் விழா நெருங்கிவரும் நேரத்தில்தான் வருமானம் கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து மண்பானை செய்யும் பணிகளில் மும்முரமாகத் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

மண்பாண்டங்களை மறந்த மக்கள்

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இயற்கை முறையில் செய்யப்பட்ட மண்பாண்டங்களை மறந்து செயற்கை முறையிலான பித்தளை சில்வர் அலுமினியம் பானைகளைப் பயன்படுத்துவதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொங்கல் விழா நேரத்திலும் சரியான வருமானமின்றி வாழ்வாதாரம் இல்லாமல் தவித்துவருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்துப் பேசிய அவர்கள், "திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் வசித்துவரும் நிலையில் நாங்களும் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டத் தொழிலைத்தான் செய்துவருகின்றோம். அரசு ஒன்றரை அடி மண் எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

எங்களுக்கு ஐந்தடி ஆறு அடியில்தான் பானை செய்வதற்கு ஏற்ற மண் இருக்கும் ஒன்றரை அடியில் உள்ள மண்ணை எடுத்து ஆயிரக்கணக்கில் செலவுசெய்து தற்போது பொங்கல் விழா நெருங்கிவரும் நேரத்தில் மண்பாண்டங்களைச் செய்துவருகின்றோம். எங்களுக்குப் பொங்கல் விழா நேரத்தில்தான் வருமானம் கிடைக்கும் என்பதால் மும்முரமாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றோம்.

சென்ற ஆண்டு உற்பத்தியே தேங்கியுள்ளது

மண்பாண்டங்களை மறந்த மண்ணின் மைந்தர்கள்: மாறிவரும் பண்பாடு?

தற்போது பொதுமக்கள் அனைவரும் மண்பாண்டங்களை மறந்து சில்வர் பித்தளை பாத்திரங்களுக்கு மாறிவருவதால் எங்களுக்கு மண் பானைகள், சட்டிகள், எதுவும் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துவருகின்றன. சென்ற ஆண்டு செய்த மண்பாண்டங்கள் அனைத்தும் தேங்கிப்போய்விட்டன.

மேலும் மண் பானைகள் வாங்கவரும் வாடிக்கையாளர்களும் எங்களிடம் பேரம் பேசி முடிந்தவரை குறைந்த விலையில் பெற்றுச் செல்கின்றனர். தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து ஊரடங்கு நடைமுறைப்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் வாங்க வருவார்களா, செய்துவைத்த மண்பாண்டங்கள் முழுவதும் தேக்கம் அடைந்து விடுமோ! என்ற அச்சத்தில் உள்ளோம்.

சில மண்பாண்டத் தொழிலாளர்கள் இந்தத் தொழிலை மறந்து மாற்றுத் தொழிலாகக் கூலி வேலைக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது" என வேதனை தெரிவிக்கின்றனர்.

நலவாரியங்கள் மூலம் உதவி வேண்டும்

எனவே தமிழ்நாடு அரசு மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு நல வாரிய அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்கி நலவாரியம் மூலமாக எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் பொதுமக்களிடையே மறந்துபோன மண்பாண்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளன.

இதையும் படிங்க: Jallikattu Allowed in TN:ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி - தமிழ்நாடு அரசு

Last Updated : Jan 10, 2022, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.