தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
நேற்று வேட்புமனுக்கள் அளிக்க கடைசி நாள் என்பதால் காலை முதலே, வேட்புமனுத் தாக்கல் செய்ய வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 151 வேட்பாளர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 1306 வேட்பாளர்கள், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2645 வேட்பாளர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9332 வேட்பாளர்கள் என மொத்தம் 13ஆயிரத்து 434 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
எலி குட்டிகள் சண்டையிடும் அபூர்வ காட்சி; மனதை வென்ற க்யூட் புகைப்படம்!