ETV Bharat / state

டிராக்டர் பேரணி நடத்திய விவகாரம்: திமுக உள்பட கூட்டணி கட்சியினர் 3 பேர் கைது

திருவாரூர்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் டிராக்டர் பேரணி நடத்திய திமுக உள்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 3 பேர் கைது

author img

By

Published : Jan 29, 2021, 10:53 AM IST

Updated : Jan 29, 2021, 12:12 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருவாரூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கடந்த 26ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது தடையை மீறி டிராக்டரில் வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும் - காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் துரைவேலன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 3 பேர் கைது

அதில் சட்டவிரோதமாக ஒன்று கூடியது, காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தம்புசாமி, திமுகவைச் சேர்ந்த பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துரை ராஜ் ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: தடையை மீறி டிராக்டர் பேரணி : விவசாயிகள், போலீசாரிடையே தள்ளுமுள்ளு

Last Updated : Jan 29, 2021, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.