திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கரோனா நிவாரண பொருட்களை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
"தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த சமயத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருவதை பெருமையாக கருதுகிறேன். மே மாதத்திற்கு உரிய ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை, நாளை மறுநாள் வழங்கப்படும். நான்காம் தேதி முதல் நாளொன்றுக்கு 150 பேர் வீதம் ரேஷன் பொருட்களும், நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.
ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், நிவாரணத் தொகையை வாங்காதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்தில் புதிய தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. தற்போது வரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உள்ளது. அவர்களில் 13 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: மகளுக்காக மருத்துவச் சீட்டை முறைகேடாகப் பெற்ற கிரண்பேடி! - அடுக்கடுக்காக புகார் கூறும் அமைச்சர்