ETV Bharat / state

தியாகராஜர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு - தியாகராஜர் திருக்கோவில் புதிய கொடி மரம்

திருவாரூர்: உலகப் பிரசித்தி பெற்ற மிகப் பழமையான தியாகராஜர் திருக்கோயிலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.

thiruvarur thiyagarajar temple kodimaram Kudumuzakku
தியாகராஜர் திருக்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு!
author img

By

Published : Feb 6, 2020, 10:01 AM IST

திருவாரூர் மாவட்டத்திலுள்ள தியாகராஜர் கோயில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் மூலவர் வன்மீகநாதர் எதிரில் இரண்டாம் சன்னதியில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொடிமரம் சிறிது சேதம் அடைந்ததன் காரணமாக கோயில் நிர்வாகம் சார்பில் புதியதாகக் கொடிமரம் அமைக்கும் பணி சென்ற மாதம் தொடங்கியது. கொடி மரமானது 5 1/2அடி உயரமும் 6 1/2 அடி சுற்றளவும் கொண்ட தேக்கு மரத்தில் செய்யப்பட்டு செப்புக் கவசங்களால் வடிவமைக்கப்பட்டது.

thiruvarur thiyagarajar temple kodimaram Kudumuzakku
தியாகராஜர் திருக்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு!

இன்று நான்காம் கால யாக வழிபாடோடு தொடங்கி, மங்கல வாத்தியங்கள் இசைக்க தலைமை சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓத, பூமிக்கு அடியில் தங்கம், வெள்ளி, நவரத்தின கற்கள் வைக்கப்பட்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர், தீர்த்தங்களைக் கொடிமரத்திற்கு எடுத்து வந்து மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜர் கோயில் குடமுழுக்கு

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் கவிதா, பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், உதவி ஆணையர் வில்வமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வன்மீகநாதரை தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க : டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்

Intro:

Body:திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோயில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. ஆண்டு தோறும் மூலவர் வன்மீகநாதர் எதிரில் இரண்டாம் சன்னதியில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொடிமரம் சிறிது சேதம் அடைந்ததன் காரணமாக கோயில் நிர்வாகம் சார்பில் புதியதாக கொடிமரம் அமைக்கும் பணி சென்ற மாதம் தொடங்கியது. கொடி மரமானது 54 1/2அடி உயரமும் 6 1/2 அடி சுற்றளவும் கொண்ட தேக்கு மரத்தில் செய்யப்பட்டு செப்பு கவசங்களால் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சிவாச்சாரியர்கள் நான்காம் கால யாக பூஜையுடன் தொடங்கி மங்கல வாத்தியங்களுடன் தலைமை சிவாச்சாரியார் தீர்த்தங்களை கொடி மரத்திற்கு எடுத்து வந்து மந்திரங்கள் முழங்க கும்பாவிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோயில் அலுவலர் கவிதா, அறங்காவலர் தியாகராஜன், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.