ETV Bharat / state

பைக் பெட்டியை உடைத்து 1.5 லட்சம் ரூபாய் திருட்டு - திருத்துறைப்பூண்டி திருட்டு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து ரூ 1.5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

MONEY THEFT
author img

By

Published : Nov 7, 2019, 8:17 AM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே விட்டுகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (44 ).

ஒப்பந்ததாரரான இவர் நேற்று திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் உள்ள இந்தியன் வங்கியில் தனது சேமிப்பு கணக்கிலிருந்து ரூ 1.5 லட்சம் எடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார்.

பின்னர், அருகே உள்ள கடையில் கூரியர் அனுப்பிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டது தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பைக் பெட்டியை உடைத்து பணம் திருட்டு

இதையும் வாசிங்க : ஒரே நேரத்தில் 2 செல்போன்களைக் கொள்ளையடிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி!

இதனையடுத்து, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இரு சக்கர வாகனங்களின் பெட்டிகளை உடைத்து பணம் கொள்ளைப்போவது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் அச்சம் நிலவிவருகிறது.

Intro:Body:திருத்துறைப்பூண்டியில் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை . திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை .

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுகட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன்(44 )ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் இன்று திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் உள்ள இந்தியன் வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூபாய் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் எடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் பூட்டிய பின்னர் அருகே உள்ள கடையில் கூரியர் அனுப்பி திரும்பி வந்து பார்த்தபோது பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அருகே உள்ள சிசிடி வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர் .
திருத்துறைப்பூண்டியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இரு சக்கர வாகனங்களின் பெட்டிகள் உடைத்து பணம் கொள்ளை போவது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது .இந்த கொள்ளை சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி :ராஜேஸ்வரன் பாதிக்கப்பட்டவர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.